வுஹனில் பரவிய அதே 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதுதான் காரணமா? பின்னணி!

Subscribe to Oneindia Tamil

குஜராத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பலியாவதற்கு அங்கு பரவும் 'எல்' வகை கொரோனா வைரஸ் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    வுஹானில் பரவிய அதே வகை கொரோனா... குஜராத்தில் பாதிப்புக்கு காரணமா?

    காந்தி நகர்: குஜராத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பலியாவதற்கு அங்கு பரவும் 'எல்' வகை கொரோனா வைரஸ் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களில் மிக மோசமான மாநிலம்தான் குஜராத். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவில் குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

    குஜராத்தில் மொத்தம் 3,071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 282 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 2656 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 133 பேர் பலியாகி உள்ளனர்.

    குஜராத் மாற்றம்

    குஜராத் மாற்றம்

    குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இதற்கு குஜராத்தில் பரவும் கொரோனா வைரஸின் வகையும் கூட ஒரு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். கொரோனா வைரஸில் அது என்ன வகை என்று உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். கொரோனா வைரஸ் என்பது ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். ஆர்என்ஏ வகை வைரஸ்கள் ஏ என்ற நபரில் இருந்து பி என்ற நபருக்கு பரவும் போது அதன் ஆர்என்ஏ அமைப்பு மாற்றம் அடையும். அதாவது அந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.

    ஆர்என்ஏ வகை வைரஸ் மாறும்

    ஆர்என்ஏ வகை வைரஸ் மாறும்

    இப்படி ஆர்என்ஏ வகை வைரஸ்கள் உருமாற்றம் அடைவதை mutation என்று அழைப்பார்கள். COVID -19 ஐ தற்போது பரப்பி வரும் கொரோனா வைரஸ் இதேபோன்ற mutate ஆகி வருகிறது. சீனாவில் பரவிய அதே வகை உலகம் முழுக்க பரவவில்லை. சில நாடுகளில் இந்த வைரஸ் கொஞ்சம் உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் கொரோனாவை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மொத்தம் மூன்று வகையான கொரோனா வைரஸின் strain இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மூன்று வகையானது

    மூன்று வகையானது

    சீனாவில் இருக்கும் கொரோனாவின் தோற்றமும், அமெரிக்காவில், ஐரோப்பாவில் பரவும் கொரோனாவின் தோற்றமும் ஒரே மாதிரி இல்லை. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா strain வேறு மாதிரி உள்ளது.

    1. சீனாவில் தோன்றிய கொரோனா எல் (L) வைரஸ் வகை

    2. ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வரும் கொரோனா எஸ்(S) வைரஸ் வகை

    3. அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்கிடமில் பரவி வரும் வைரஸ் வகை மூன்று ( எஸ் மற்றும் எல் கலவை) ஆகிய வகைகள் உள்ளது.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இதில் குஜராத்தில் சீனாவில் பரவிய அதே எல் (L) வைரஸ் வகை பரவி வருகிறது. இந்த எல் வகை வைரஸ் மிகவும் வலிமை வாய்ந்தது. மற்ற வகைகளை விட அதிக பலம் வாய்ந்தது. இதை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம். இதனால்தான் குஜராத்தில் நோயாளிகளை குணப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. நோயாளிகள் வேகமாக பலியாகிறார்கள் என்று குஜராத் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் எல் வகை வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்வோம் என்றும் குஜராத் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கேரளா தமிழகம்

    கேரளா தமிழகம்

    ஆனால் கேரளா மற்றும் தமிழகத்தில் எஸ் வகை கொரோனா பரவி வருகிறது. இது கொஞ்சம் ஆபத்து குறைந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் இதே எஸ் வகைதான் பரவியது. கேரளாவிலும் அதிகமாக மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வந்த நோயாளிகள்தான் உள்ளனர். இதனால் எளிதாக எஸ் வகை கொரோனா நோயாளிகள் அங்கு குணப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று குஜராத் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக குஜராத் அரசு கேரளாவின் ஆலோசனையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    இதுதான் குஜராத்தில் கொரோனா மரணம் அதிகரிக்க காரணம் என்கிறார்கள். இந்தியாவில் மூன்று வகையான கொரோனா பரவி வருகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து நேரடியாக வந்தது. அதன்பின் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவும் வகையை சேர்ந்தது. அதன்பின் தென் மாநிலங்களில் பரவும் கொரோனா வைரஸ் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+