டெல்லியில் கெஜ்ரிவால் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன...: காங்கிரஸ்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நாட்கள் எண்ணப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பிரதேசத்தின் போலீஸ் நிர்வாக அதிகாரத்தை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இந்தியாவின் தலைநகரான டெல்லியே முடங்கும் அபாயத்தில் உள்ளது. முதல்வர் ஒருவரே இவ்வாடு போராடுவது இது தான் முதல் முறை எனக் கூறப் படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீம் அப்சல், ‘டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நாட்கள் எண்ணப் படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-
கெஜ்ரிவால் தொடங்கியுள்ள நடவடிக்கைகளின் படி அவரது அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒரு அரசு தலைமைச்செயலகத்தில் இருந்து இயங்குகின்றது. அது தெருக்களில் இருந்து இயங்கவில்லை.
அரசின் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் நின்று போராடும் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலத்தை ஆளுகிறபோது நீங்கள் எதிர்கட்சிகளை போன்று செயல்பட முடியாது' என்றார்.
மேலும், கெஜ்ரிவாலும் அவரது ஆட்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவு குறித்து காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications