நடுவானில் பறந்து கொண்டே திருமணம் செய்து கொண்ட ஆச்சர்ய தம்பதி !
கோலாப்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த மலையேற்ற வீரர் 600 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கிய படியே திருமணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக திருமணங்கள் மண்டபகங்கள், உணவு விடுதிகள் மற்றும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதிலும் புதுமை செய்ய விரும்புவர்கள் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் திருமணம் செய்துள்ளனர். தற்போது அதையும் தாண்டி புதுவிதமாக மலையேற்ற வீர்ர் நடுவானில் பறந்துகொண்டே திருமணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஜெய்தீப் ஜாதவ். இவருக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் ரேஷ்மா பாட்டீலுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. தன் திருமணத்தை மலையேற்ற விளையாட்டு குறித்த ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் நடத்த ஜெய்தீப் திட்டமிட்டார். அதற்கு, ரேஷ்மாவும் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள விஷாலகாதா மற்றும் பன்ஹாலா சிகரங்களை இணைக்கும் வகையில் 600 அடி உயரத்தில் உறுதியான பிளாஸ்டிக் கயிறுகள் கட்டப்பட்டன. பின்னர் தம்பதிகள் இருவரும் பாரம்பரிய மகாராஷ்டிர உடைகளை அணிந்து கொண்டு, கயிற்றில் தொங்கியபடி ஜெய்தீப்பும், ரேஷ்மாவும் கயிற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
மற்றொரு கயிற்றில் தொங்கியபடி, திருமண மந்திரங்களை புரோகிதர் ஓத, ரேஷ்மா கழுத்தில் ஜெய்தீப் தாலிகட்டினார். இந்த திருமணம் மொத்தம் 40 நிமிடங்கள் நடு வானில் நடைபெற்றதுதான் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மேலும் இந்தத் திருமணத்தை சுமார் 1,200 மக்கள் கண்டுகளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications