பிரணாப் முகர்ஜி மாளிகை முன்பு ஆடையை அவிழ்த்து தம்பதி ரகளை
டெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் 30களில் இருக்கும் கணவன், மனைவி தங்கள் ஆடைகளை அவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30களில் உள்ள கணவன் மற்றும் மனைவி ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பார்க்க வேண்டும் என்று கூறி டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு வந்தனர். அவர்கள் பிரணாபை எதற்காக பார்க்க வேண்டும் என்ற காரணத்தை கூற மறுத்தனர். இதனால் மாளிக்கைக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து கணவனும், மனைவியும் படபடவென்று தங்கள் ஆடைகளை அவிழ்த்தனர். இதை பார்த்து பதறிய போலீசார் அவர்களை ஆடைகளை மறுபடியும் உடுத்த வைத்தனர். அப்போது அந்த நபர் குடியரசுத் தலைவர் மாளிகை உள்ள பக்கம் நோக்கி திடீர் என்று ஓடத் துவங்கினார்.
இதையடுத்து போலீசார் ஜீப்பில் சென்று அவரை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். பின்னர் கணவனும், மனைவியும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications