ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ749 கோடி சொத்துக்கள் முடக்கம் செல்லும்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ749 கோடி சொத்துக்கள் முடக்கம் செல்லும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது செல்லும் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்கான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ரூ. 404 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், ரூ. 344 கோடி அசையா சொத்துக்கள் என ரூ.749 கோடி சொத்துக்கள் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவிக்கு சொந்தமான தெலுங்கானா, கர்நாடாக, ஆந்திரா மாநிலங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து முடக்கம் செய்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துகளை முடக்கியதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இதில் தொடர்புடையவர்களுக்கு பண மோசடியில் தொடர்பிருப்பதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும் என்றும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது
ஜெகன் மோகன் ரெட்டியின் கம்பெனிகளான சாக்ஷி பத்திரிக்கை, டிவி, பாரதி சிமென்ட், லோட்டஸ் பாண்டு பவர், பெங்களூரில் ராஜ்மஹால், வாணிஇச்சா பவன் மற்றும் அவரிடம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி












Click it and Unblock the Notifications