அன்புமணி ராமதாஸ் மீதான சிபிஐ வழக்கு: டிசம்பர் 2-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அனுமதி வழங்கியதாக, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 2-ந் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில், 2008-09 கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்த போதும், விதிகளை மீறியும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும் அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் அனுமதி அளித்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதில் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்த போது சுகாதாரத் துறையில் துணைச் செயலராக இருந்த கே.வி.எஸ். ராவ், சுகாதார அமைச்சகப் பிரிவு அலுவலர் சுதர்சன் குமார், சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ். தூபியா, திபேந்திர குமார், இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சிரேஷ் சிங் பதோரியா, கல்லூரியின் முன்னாள் டீன் எஸ்.கே. டோங்கியா, கல்லூரியின் இயக்குநர் கே.கே. சாக்ஸனா, நிதன் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2012 ஏப்ரல் 27-ந் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மது ஜெயின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
கடைசியாக நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இதுவரை ஆஜராகி வந்த சிபிஐ வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்க்கின் விசாரணையை டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications