டெல்லி சட்டசபை தேர்தல்: 55 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு சி.பி.எம். ஆதரவு!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாக சி.பி.எம். அறிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய இருக்கிறது. வரும் 10-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
டெல்லியில் மொத்தம் 15 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். எஞ்சிய 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளோம். கடந்த காலத்தில் இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்.
எங்களுடைய பிரதான நோக்கம் டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்.. குறிப்பாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications