மோடியின் திடீர் பாக். பயணத்துக்கு இ.கம்யூனிஸ்ட் 'ஷாக்' வரவேற்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென தாம் பாகிஸ்தானுக்குப் போவதாக அறிவித்தார். இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் ட்விட்டரில் இத்தகவலை மோடி வெளியிட்டது பரபரப்பை கிளப்பியது.

ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து நேராக லாகூர் சென்ற மோடி, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆனால் பிரதமர் மோடியின் இந்த பயணத்தை வரவேற்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியதாவது:
இருநாடுகளிடையேயான உறவில் நிறைய விரிசல்கள் இருக்கின்றன. அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடனான சந்திப்பு உள்ளிட்டவைகள் இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து வந்தன.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியும் தற்போது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ஆகையால் பிரதமர் மோடியின் இந்த பயணம் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications