தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற சிபிஎம் பிரமுகர்.. கேரளாவில் பரபரப்பு
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில், வெளிநாடு வாழ் இந்தியரான தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சிப் பிரமுகர் சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்.
முதலில் இவர் ஏதோ திருடன் என்றுதான் சந்தேகிக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால் இவர் வளையோடி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்று தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிசிடிவி கேமராப் பதிவு மூலம் இவர் சிக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடு யூனுஸ் என்ற தொழிலதிரின் வீடாகும். இவர் தனது குடும்பத்துடன் வளைகுடாவில் வசித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து விட்டார் ராகவன்.
திங்கள்கிழமையன்று வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்த யூனுஸின் உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் பணமோ நகைகளோ எதுவும் இல்லையாம். இதனால் ராகவனின் திருட்டு முயற்சி வெற்றி பெறவில்லை. அதேசமயம் வேறு ஏதாவது திருட்டுப் போயிருக்கிறதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமராப் பதிவைப் பார்த்துதான் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ராகவன் என்று தெரிய வந்தது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications