மே.வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசோடு கூட்டணியா? மா.கம்யூ பொலிட்பீரோ இன்று கூடுகிறது
கொல்கத்தா: அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம்மிக்க பொலிட்பீரோ குழு இன்று டெல்லியில் கூடுகிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், காங்கிரசோடு இணைந்து கூட்டணி வைப்பது குறித்து முக்கிய முடிவு இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களான, பாலகிருஷ்ணன், பினராயி விஜயன் போன்றோர், காங்கிரசோடு கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பல உறுப்பினர்கள் கூட்டணியை விரும்புகிறார்கள்.

இதில், முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கருத்து முக்கியத்துவம் பெறும். ஏனெனில், அவர் பதவிக்காலத்தில்தான், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவை வாபஸ் பெற்றது.
வயது முதிர்வு காரணமாக, முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா டெல்லி வரமுடியாது என்பதால், அவர் தனது கருத்தை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வாய்ப்புள்ளது. மம்தா கட்சியை எதிர்க்க காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பதே பாதுகாப்பானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் முக்கிய தலைவர்கள் நினைப்பதே இந்த கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம்.
மேற்கு வங்கத்திற்கும் இவ்வாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள்











Click it and Unblock the Notifications