மே. வங்க சட்டசபை தேர்தல்: காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி? சீதாராம் யெச்சூரி 'சூசகம்'
டெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி 'சூசகமாக' தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய சிறப்பு மாநாடு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் திரிணாமுல், பா.ஜ.க.வை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கொல்கத்தாவில் சீதாராம் யெச்சூரியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கொல்கத்தாவில் இன்று நடைபெறும் சிறப்பு மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைப்பது குறித்து இன்றைய மாநாட்டுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேநேரத்தில், பிற ஜனநாயக அமைப்புகளுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராகவே உள்ளது. இந்த மாநில தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல். மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்றார்.
பொதுச்செயலராக உள்ள யெச்சூரியைப் பொறுத்தவரையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியை கொண்டுவர வேண்டிய நெருக்கடி உள்ளது. இதனால் அவர் தனித்துப் போட்டியிடுவதை விட காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவே வாய்ப்புள்ளது. இதனையே அவர் சூசகமாக ஜனநாயக சக்திகளுடன் கூட்டணிக்கு தயார் என தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications