கம்பேக் கொடுக்கும் மம்தா யூனிட்... கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் கட்சியில் ஐக்கியம்!
கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பெங்காலி திரைப்பட நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக், சயோனி கோஷ் ஆகியோர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.
இன்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் எல்லா அன்பும் ஆதரவும் தேவை என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இந்த முறை மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அங்கு ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இந்த முறை மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

முக்கிய தலைவர்கள் விலகல்
இதனால் பாஜகவின் அமித்ஷா அங்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோரும் பிரசாரம் செய்தனர். இருகட்சியினரும் வார்த்தையால் மோதிக் கொண்டனர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பலர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது மம்தாவுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது.

திரிணாமுல் கட்சியில் இணைந்தார்
மேற்கு வங்கத்தில் அமிதிஷாவின் கணக்கு பலிக்க தொடங்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உள்பட 4 பிரபலங்கள் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர் . மேற்கு வங்கத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மனோஜ் திவாரி, பெங்காலி திரைப்பட நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக், சயோனி கோஷ் ஆகியோரும் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.

புதிய பயணம் தொடங்கியுள்ளது
திரிணாமுல் கட்சியில் சேர்ந்த மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ' இன்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் எல்லா அன்பும் ஆதரவும் தேவை. இனிமேல் இது இன்ஸ்டாகிராமில் எனது அரசியல் சுயவிவரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications