"தூண்டில் மீன்".. அப்பதான் பழக்கம்.. உடம்பு பெட்டியில், தலை கவரில்.. இந்து பெண்ணை பீஸ் பீஸாக.. ஷ்ஷாக்

இந்து பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டிய இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: டிட்டோ டெல்லியில் நடந்தது போலவே, இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. தன் காதலியை அதே போல வெட்டி கூறுபோட்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் அபுபக்கர்.. கவிதா ராணியை என்பவரை இவர் காதலித்து வந்துள்ளார்... இந்நிலையில், கடந்த நவம்பர் 6ம் தேதி முதல் அபு பக்கரை காணவில்லை.

இது அவரது நண்பர்கள் முதல், வேலை பார்க்கும் இடங்கள் வரை அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.. முதலில் அவர் செல்போனுக்கு போன் செய்தனர்.. ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை.

 தலை உடல்

தலை உடல்

ஆபீசுக்கு அபுபக்கர் வராததால், அவர் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு ஆள் அனுப்பி உள்ளார்... ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.. ஹவுஸ் ஓனருக்கும் இது சந்தேகத்தை கிளப்பியது.. அதனால், போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அபுபக்கர் வீட்டில் ஏதாவது ஆதாரம் கிடைக்கலாம் என்று, வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. ஆனால், உள்ளே நுழைந்ததுமே போலீசார் அதிர்ந்து நின்றுவிட்டனர்.. தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது..

சடலம்

சடலம்

அந்த உடல், ஒரு பெட்டியில் போடப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது.. அந்த கவருக்குள் அந்த பெண்ணின் தலை கிடந்தது.. ஆனால், கைகளை காணவில்லை.. இதையடுத்து, உடனடியாக விசாரணையில் குதித்தனர்.. படுகொலை செய்யப்பட்டவர் பெயர் கவிதா ராணி என்பது தெரிய வந்தது.. அபுபக்கருக்கு ஒரு காதலி இருக்கிறார்.. அவர் பெயர் சப்னா.. இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்..

 துண்டு துண்டாக..

துண்டு துண்டாக..

கொலை செய்வதற்கு 5 நாள் முன்புதான், கவிதா ராணி அபுபக்கருக்கு பழக்கம் ஆகி உள்ளார்.. ஆனால், அதற்குள் வெட்டி துண்டு துண்டாக்கிவிட்டார்.. கடந்த நவம்பர் 5ம் தேதி, தன்னுடைய வீட்டுக்கு கவிதாவை அபு பக்கர் அழைத்து வந்திருக்கிறார்.. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.. அந்த் சண்டையில்தான், ஆத்திரமடைந்த அபு பக்கர் கவிதாவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்... அங்கேயே உட்கார்ந்து தலையை தனியாகவும், உடம்பை தனியாகவும், கைகளை தனியாகவும் வெட்டியுள்ளார்...

 தூண்டில் மீன்

தூண்டில் மீன்

கைகளை மட்டும் வெளியே எடுத்து வந்து, அருகில் இருந்த ஒரு கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.. தலையை ஒரு பாலிதீன் கவரில் வைத்து விட்டு, உடலையும் ஒரு பெட்டியில் போட்டுவிட்டு, சப்னாவுடன் ருப்சா ஆற்றை கடந்து டாக்காவுக்கு அபு பக்கர் தப்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, டாக்கா விரைந்த போலீசார் காசிபூர் மாவட்டத்தில் அபு பக்கரையும், சப்னாவையும கைது செய்தனர். கொலை செய்ததை அபு பக்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.. ஆனால் இன்னும் இதற்கான காரணங்கள் தெரியவில்லை.. டெல்லி கொலை அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளமுடியாத நிலையில், இன்னொரு லிவிங் டூ கெதர், இன்னொரு கொடூரம்..!!

பிளாஸ்டிக் கவர்

பிளாஸ்டிக் கவர்

இதனிடையே இந்த கொலை குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. அபுபக்கர், சப்னாவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், உயிரிழந்த கவிதாவுடன் சமீபத்தில்தான் நெருக்கமாகி வந்துள்ளார். கடந்த நவம்பர் 5ம் தேதி, சப்னா வேலைக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டாராம்.. அப்போதுதான், வீட்டில் யாருமில்லை என்று சொல்லி, ​​கவிதாவை அபுபக்கர் அழைத்து வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் அபு பக்கர், கவிதாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. மேலும், கோபர்சகா என்ற பகுதியில் இருக்கும், ஒரு குறுகிய சந்துக்குள், கவிதாவின் வெட்டப்பட்ட கை இருப்பதாக சொல்லி உள்ளார்.. இதையடுதது, அந்த இடத்துக்கு விரைந்த போலீசார், பாலித்தீன் சுற்றப்பட்ட கவரில், கவிதாவின் துண்டிக்கப்பட்ட கைகளை மீட்டெடுத்தனர்.. தொடர்ந்து அபுபக்கரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+