"செல்லம்.. ஏமாத்துவியா".. படுக்கை போர்வையை கேஷூவலாக விலக்கி "வாக்குமூலம்" தந்த இளைஞர்.. பரிதாப ஷில்பா
காதலியை கொன்று அதை வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
காந்திநகர்: ஒரு இளைஞர் அடுத்தடுத்து 3 வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் மிரள செய்துவிட்டார்.. அந்த இளைஞரை காணோம் என்று 4 தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில், தற்போது அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் அபிஜீத் படிதார்.. இவர் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் பிசினஸ் செய்து வருகிறார்.
எண்ணெய் மற்றும் சர்க்கரை பிசினஸ் செய்து வந்துள்ளார்.. இவர், கடந்த வெள்ளிக்கிழமை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

பச்சை துரோகம்
அதில் பேசிய அபிஜீத், "யாரும் பச்சையாக துரோகம் செய்யக்கூடாது" என்றார்.. இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று பலரும் ஒரு நிமிஷம் குழம்பிவிட்டார்கள்.. பிறகு அந்த இளைஞர், டக்கென அங்கிருந்த ஒரு உருவத்தை காட்டினார்.. அந்த உருவம் படுக்கையில் படுத்திருந்தது.. அதற்கு மேல் ஒரு போர்வை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.. முகம்கூட தெரியவில்லை.. பிறகு திடீரென அந்த உருவத்தின் மீது மூடப்பட்டிருந்த பெட்ஷீட்டை விலக்கி காட்டினார்.. அங்கே ஒரு பெண், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்.. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து விட்டனர்..

செல்லம் ஷில்பா
பிறகு உடனே இன்னொரு வீடியோவை அபிஜீத் வெளியிட்டார்.. அந்த வீடியோவில், "இப்ப பார்த்தீங்க இல்லே, அந்த பெண்ணை நான்தான் கொன்றேன்" என்று கேஷூவலாக சொன்னார்.. "அவள் என் காதலி.. ரொம்ப உயிருக்கு உயிராக விரும்பினேன்.. ஆனால், அவள் ஜிதேந்திரகுமார் என்பவருடன் உறவு வைத்திருந்தாள்.. அந்த ஜிதேந்திரகுமார் என்னுடைய பார்ட்னர்தான்.. எங்கள் இருவரிடமும் நெருங்கி பழகி, ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு எங்கியோ ஓடி தலைமறைவாகிவிட்டாள்.. இந்த விஷயத்தை எனக்கு சொன்னதே ஜிதேந்திரகுமார்தான்.. 2 பேருக்குமே துரோகம் செய்துவிட்டாள்.. ஜிதேந்திரகுமார் சொன்னதால்தான் நான் அவளை கொன்றேன்" என்றார்..

1 2 3 ஷில்பா
பிறகு 3வதாக இன்னொரு வீடியோவை அபிஜீத் பதிவிட்டார்.. அந்த வீடியோவில், "செல்லம்... நாம 2 பேரும் சொர்க்கத்தில் சந்திப்போம்" என்று சொல்லியிருக்கிறார்.. இந்த 3 வீடியோக்களும் அடுத்தடுத்து வெளிவந்து பெரும்பாலானோரை அதிர வைத்துவிட்டது.. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா.. 22 வயதாகிறதாம்.. அவரும் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்... அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் ரூமில்தான் படுகொலை செய்யப்பட்டு கிடந்தாள்..

வீடியோஸ்
ஆனால், இந்த கொலை சம்பவம் உடனே தெரியவில்லை.. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமைதான் போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.. இத்தனை வீடியோ போட்ட அந்த அபிஜீத்தை இப்போது காணவில்லை.. தலைமறைவாகிவிட்டார்... அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்... இதையடுத்து, போலீசார் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் கைது செய்திருக்கின்றனர்...

இன்ஸ்ட்டா
கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.. அபிஜீத்தை பிடித்தால்தான், மற்ற விவரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.. அபிஜித்தும் ஷில்பாவும், இன்ஸ்டாவில்தான் அறிமுகமாகி உள்ளனர்.. ஜிதேந்திரகுமாரை, ஷில்பாவுக்கு அபிஜித் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.. 2 பேரிடமும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் நெருங்கி பழகி ரூ.12 லட்சம் வரை பணம் பறித்துவிட்டு, ஜபல்பூருக்கு தப்பி சென்றுள்ளார்...

உல்லாசம்
நவம்பர் 6ம் தேதி மேக்லா என்ற ரிசார்ட்டில் ரூம் எடுத்துள்ளார் அபிஜித்.. அங்கிருந்து ஷில்பாவுக்கு போன் செய்து, ரூமுக்கு வரசொல்லி உள்ளார்.. நவம்பர் 8ம் தேதி ஷில்பா அந்த ரெசார்ட்டுக்கு வந்துள்ளார்... அப்போது இருவருமே உல்லாசமாக இருந்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், ஷில்பாவின் கழுத்தை அறுத்துள்ளார் அபிஜித்.. உயிருக்கு போராடி ரத்த வெள்ளத்தில் ஷில்பா மிதக்கும்போது, செல்போனில், அதை சாவகாசமாக வீடியோ எடுத்துள்ளார்.. அபிஜீத் வீடியோ எடுக்கும்போது, ஷில்பா உயிர் பிரிந்துள்ளது.. அபிஜித்தை கைது செய்ய மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத்திற்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரியங்கா தெரிவித்திருந்தார்.

துண்டு துண்டாக
சமீபத்தில் டெல்லியில் காதலனால் பெண் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வீடியோ மத்திய பிரதேசத்தில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இதனிடையே, ஷில்பாவை கொன்ற அபிஜீத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில், அபிஜித், போலீசாரின் பலத்த தேடுதல் வேட்டைக்கு நடுவில் கைதாகி உள்ளார்.. ஷில்பா கொலை குறித்து அபிஜித்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அத்துடன், இந்த கொலையில் பார்ட்டரின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications