லாட்ஜ் ரூமுக்குள்ளே.. சைஸாக நுழைந்த "சர்வீஸ் பாய்ஸ்.". ஐயா, யார் அந்த பெண்.. அலறியடித்து ஒரே ஓட்டம்
பெண்ணை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
கான்பூர்: கணவனுடன் கோபித்து கொண்டு, கள்ளக்காதலனிடம் தஞ்சம் அடைந்தார் இளம்பெண்.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. நாளுக்கு நாள் வன்முறைகளும், குற்றங்களும் பெருகி வரும் உத்தரபிரதேசத்தில்தான், இந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பாக்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.. இவரது மனைவி பெயர் ரச்சனா... சம்பவத்தன்று வெளியே சென்ற ரச்சனா மறுபடியும் வீடு திரும்பவில்லை..
இதனால் பதறிப்போன ராஜ்குமார் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, ரச்சனாவை தேடி வந்தனர்.. அப்போதுதான், காஜியாபாத்தில் உள்ள லாட்ஜில் ரச்சனா கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது..

மாறிய உறவு
இதையடுத்து, அவர் யாருடன் அந்த லாட்ஜூக்கு வந்தார் என்று விசாரித்தபோது, அவருடன் அதே லாட்ஜில் தங்கியிருந்த கௌதம் என்பவர் சிக்கினார்.. உடனடியாக கௌதமை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான், மொத்த உண்மையும் வெளியே தெரிந்தது. திருமணமான ரச்சனாவுக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான், கௌதம் சிங் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.. அறிமுகமான நிலையிலேயே கள்ளக்காதலும் ஆரம்பமாகி உள்ளது.. இவர்களின் விவகாரம், ராஜ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து, ரச்சனாவை கண்டித்தார்..

சந்தர்ப்பம்
ஆனால், ரச்சிதா தொடர்ந்து ராஜ்குமாருடனான உறவை கைவிட சம்மதிக்கவில்லை.. சம்பவ நாளன்றும் இதே தகராறுதான் தம்பதிக்குள் வெடித்துள்ளது.. அதனால், இதனால் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறி விட்டார் ரச்சனா. நடந்த சம்பவத்தை கௌதமிடம் சொல்லி அழுதுள்ளார்.. உடனே கௌதம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, காஜியாபாத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்கு ரச்சனாவை அழைத்துச் சென்றுள்ளார். ஒரே ரூமில் இருவரும் பகல் முழுவதும் தங்கி உள்ளனர்.. பிறகு இரவு நேரம் நெருங்கிவிட்டதால், வீட்டுக்கு போக வேண்டும் என்று ரச்சனா சொல்லி உள்ளார்..

எகிறி தப்பினார்
ஆனால், கெளதம், அன்றைய தினம் இரவும் அங்கேயே தங்க வேண்டும் என்று ரச்சனாவை கட்டாயப்படுத்தி உள்ளார்.. ஆனால், ரச்சனா அதை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அதே ரூமிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கௌதம், ரச்சனாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. பிறகு சடலத்தை அதே ரூமில் போட்டுவிட்டு, எகிறி தப்பி சென்றுள்ளார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, கெளதம் சிங் கைது செய்யப்பட்டார்..

ரூம் சர்வீஸ்
எனினும், வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறார்கள்.. கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இவர்கள் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. ஆனால், மறுநாள் காலை, லாட்ஜ் ஊழியர்கள், ரூமை சுத்தம் செய்ய வந்தபோதுதான், ரச்சனாவின் சடலத்தை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதற்கு பிறகுதான், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, கௌதம் சிக்கினார்.. ரச்சனா தன்னுடன் ஹோட்டலில் தங்க மறுத்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கௌதம் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்..
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications