மிளகாய் பண்ணை.. கரெக்ட்டா தாலி கட்டும்போது.. மாப்பிள்ளை கிட்ட வந்த நபர்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
ராய்ப்பூர்: கரெக்ட்டா தாலி கட்டும் நேரத்தில், அந்த சம்பவம் நடந்தது.. மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் வலியால் அலறி துடிக்க, ராய்ப்பூரே அதிர்ந்துபோய்விட்டது. என்ன நடந்தது?
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.
இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.

மாப்பிள்ளை: மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன... சில சமயம் கல்யாண வீடு, இழவு வீடாகும் துயரமும் நடந்துவிடுகிறது.. இதோ சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடுமையை பாருங்க.
பன்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது சோட்டே அமபால் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தம்ருதர் பாகேல்.. 25 வயதாகிறது.. இவருக்கும், 19 வயது பெண்ணுக்கும் பெரியோர்கள் திருமணம் செய்திருந்தனர்.. ஊரெல்லாம் பத்திரிகை தந்து, தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.. திருமண நாளன்று, விடிகாலையில் இருந்தே கல்யாண மண்டபம் பரபரப்பாக காணப்பட்டது.. மணமக்கள் மேடையில் இருந்தபோது, மணமகன் திடீரென கதறி துடித்தார்..
ஆசிட் வீச்சு: அப்போதுதான் அவர்மீது யாரோ ஆசிட் வீசியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.. மாப்பிள்ளை மீது வீசப்பட்ட ஆசிட், அருகில் இருந்த மணமகள் முகத்திலும் தெறித்து விழுந்தது.. இதனால், மணமகள் உட்பட, மேலும் 10 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மாப்பிள்ளையோ உருண்டு பிரண்டு வலியால் கதறினார்.. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

பிறகு, போலீசார் இதுகுறித்த விசாரணையை துவங்கினர்.. மண்டபத்தில் அவ்வளவு கூட்டம் நிரம்பியிருந்தாலும், இந்த காரியத்தை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.. இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "எங்களுக்கு முதலில் இது சம்பந்தமாக எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. அதனால், அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சில சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்தோம்.. மணமகன் மற்றும் மணமகளின் பின்னணியையும் ஆராய்ந்தோம்..
மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் குற்றம் சாட்டப்பட்டவரை சரியாக பார்க்க முடியவில்லை.. அந்த நேரத்தில் கரண்ட்டும் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.. ஆனால், விசாரணையில் மணமகன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.. அந்த பெண்ணுக்குதான், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. இப்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.. இதையடுத்து, கைதான பெண் வாக்குமூலம் தந்தார்..
ஷாக் வாக்குமூலம்: அதில், "நானும், தம்ருதர் பாகேலுக்கும் பல வருடங்களாகவே காதலித்து வந்தோம்.. ஆனால், திடீரென வேறொரு பெண்ணுடன் திருமணம் என்று கேள்விப்பட்டேன். அதனால்தான், பழிவாங்க முடிவு செய்தேன்.. இதற்காகவே, அவர் வேலை செய்யும் மிளகாய் பண்ணைக்கு போனேன்.. அங்கேயிருந்து ஆசிட்டை திருடி எடுத்து வைத்துக்கொண்டேன்.. பிறகு, கல்யாணத்துக்கு, ஆண் போல மாறுவேடமிட்டு வந்தேன்.. மேடையில் குறி பார்த்து மணமகன் மீது ஆசிட் வீசினேன்" என்றார். இப்போது மாப்பிள்ளை, கல்யாண பொண்ணு உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. முன்னாள் காதலி, ஆண் வேடமிட்டு, மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications