மரணத்துடன் போராடும் 10 வயது சிறுவன்... ஜெய்ப்பூரின் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக ஆனான்!
ஜெய்பூர்: ஜெய்பூரைச் சேர்ந்த மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க அவரை ஒரு நாள் போலீஸ் கமிஷனராக்கி காவல் துறை அழகு பார்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் கிரிஷ்(10). சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மோசமாக இருப்பதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனிடம் உனது ஆசை என்னவென்று கேட்கப்பட்டதற்கு நான் போலீஸ் கமிஷனராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரிஷின் ஆசை பற்றி ஜெய்பூர் போலீஸ் கமிஷனர் ஜங்கா ராவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று கிரிஷ் ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனராக்கப்பட்டார்.
ஒரு நாள் கமிஷனரான கிரிஷுக்கு போலீசார் சல்யூட் அடித்தனர். அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். மேலும் கேமராக்களுக்கு தனது காக்கி சீருடையில் சிரித்தபடி அழகாக போஸ் கொடுத்தார்.
தனது மகனின் வாழ்வில் அவர் போலீஸ் கமிஷனராக இருந்த தினம் தான் மகிழ்ச்சியான நாள் என கிரிஷின் தந்தை ஜகதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய்பூர் கமிஷனர் ஜங்கா ராவ் கூறுகையில்,
காவல் துறையை பற்றி நல்ல எண்ணம் இருந்தால் தான் அதில் சேர வேண்டும் என்று தோன்றும். கிரிஷுக்கு காவல் துறை மீது நல்ல எண்ணமும், மரியாதையும் உள்ளதால் அவர் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். இது காவல் துறைக்கு நல்ல விஷயம் ஆகும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications