பீகாரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலி: இருவர் படுகாயம்
அவுரங்காபாத்: பீகாரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு உட்பட்ட பந்து பிஹாகா என்ற கிராமத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணிக்கு சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற 2 வாகனங்கள் சிக்கின. இதில் சிஆர்பிஎப் வீரர் டேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய என்கவுண்டரில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications