ஸ்ரீநகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து.. மக்கள் நிம்மதி பெருமூச்சு...
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலவரத்தையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்றிலிருந்து கலவர நிலைமை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜுலை 8ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சுமார் 68 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கலவர நிலைமை சற்று ஓய்ந்து நிலைமை சீரடைந்து வருவதால் ஸ்ரீ நகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக, ஸ்ரீநகருக்கு உட்பட்ட சில பகுதிகளில் நேற்று 8 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையடுத்து இன்று முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தங்களின் தேவைக்கு ஏற்ப சாலையில் நடந்து போவதும் வருவதுமாக உள்ளனர். மேலும், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன.
எனினும், கடைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications