வேலைக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுங்கத்துறை அதிகாரி
லக்னோ: லக்னோவில் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் வீட்டு பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
போலீஸ் அதிகாரி தினேஷ் யாதவ் இது குறித்துக் கூறுகையில், புகார் வந்துள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது என்றார்.
சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரி சுசில் குமாரின் உறவினரின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த அப்பெண் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். சுசில் குமார் அப்பெண்ணை 20 நாட்களுக்கு முன்பாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம், தான் கடந்த சில மாதங்களாகவே அவரால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், பயத்தால்தான் வெளியில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"இந்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணிடம் மருத்துவ சோதனை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுசில் குமார் இந்த குற்றச்சாட்டை மறுத்ததுடன், தன்னுடைய அத்தையை ஒழுங்காக கவனித்துக் கொள்ளாததால்தான் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
"என்னுடைய உடல் நலம் சரியில்லாத அத்தையை கவனித்துக் கொள்ளதான் அவரை நியமித்தேன். ஆனால், அவர் சரியாக பணியாற்றாததால் வேலையை விட்டு நிறுத்தினேன். இதனால் கோபத்தில் பொய்ப் புகார் கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
இவ்வழக்கினை விசாரித்துவரும் அதிகாரிகள் இப்புகார் பற்றி எல்லா கோணங்களிலும் விசாரித்து வருவதாக் கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications