மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்த ஆம்பன் புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது.
Recommended Video
வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியது. இது நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில் 6 மணி நேரத்திற்கு விடாமல் காற்று வீசியது.
நீண்ட நேரம் பெய்த பேய் மழையால் சாலைகள் முழுவதும் நீரில் தத்தளித்தன. மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன.

விமான நிலையம்
கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனாவால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கார்கோ விமானமும் மீட்பு விமானமும் மட்டுமே இயக்கப்பட்டன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கொல்கத்தாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. புயல் பாதிப்பின் போது முதல்வர் அலுவலகத்தில் இருந்த மம்தா பானர்ஜி, இது பேரழிவு என்றார்.

சீரமைப்பு பணி
மேலும் கொரோனாவை விட மிகவும் மோசமான அழிவு என்றார். தாழ்வான இடங்களில் வசித்த 5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. விமான நிலையம் முழுவதும் வெள்ள நீர் புகுந்தது. அங்குள்ள ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
|
பயங்கர புயல்
இந்த புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், மிட்னாபூர், ஹூக்ளி, கொல்கத்தா ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. வங்கக் கடலில் மிகவும் பயங்கரமான புயலான ஆம்பன் புயல். 10 ஆயிரம் பேரை பலி வாங்கிய 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு பிறகு முதல் சூப்பர் புயல் ஆம்பன்தான்.

உரிமையாளர்கள்
மேற்கு வங்கத்தில் ஹவுரா பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட கார்கள் சேதமடைந்தன. கார்களின் கதவுகளின் கைப்பிடிகளுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் கார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications