பந்தாடும் பைபர்ஜாய் புயல்.. குஜராத்தை உற்று நோக்கும் மோடி! முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் விளக்கம்
காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்து வரும் நிலையில், கடலோர பகுதிகளின் நிலை குறித்து மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேலிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
கடந்த வாரம் அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் கேரளாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த புயல் அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை கடந்து குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் நிலை கொண்டது.

இந்த புயல் பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது குஜராத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் கரையை கடந்து வருகிறது. இரவு 9 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் கடக்க தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக குஜராத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பாகிஸ்தானின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புயல் கரையை கடக்கும் முன் துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

பெரும்பாலான இடங்களில் விடாமல் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இரவு மணிக்கு புயலின் வெளித்தோற்றம் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை தொட்டது. இந்த வேகம் 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் படிப்படியாக அதிகரித்தது.

குஜராத்தின் நாலியா, மண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகளை புயலின் கண் பகுதி தொட்டு உள்ளது. காற்றின் வேகமும் தற்போது மணிக்கு 125 கிலோ மீட்டரை தாண்டி வீசி வருவதால் பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்து வரும் புயலை பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாக கடந்து வந்துள்ளார்.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உயர்மட்ட குழுவை கூட்டு ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் கடலோர பகுதிகள் குறித்து கேட்டறிந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications