ஹூட்ஹூட்: ஒடிஸாவில் கர்ப்பணிகளை காப்பாற்றியவர் நிமோனியாவுக்கு பலி
புவனேஸ்வர்: ஒடிஸாவில் ஹூட்ஹூட் புயல் தாக்கும் முன்பு கர்ப்பிணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உதவியவர் நிமோனியாவால் மரணம் அடைந்தார்.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஹூட்ஹூட் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தபோதிலும் மழை மட்டும் நிற்காமல் பெய்து வருகிறது.
இந்நிலையில் புயல் தாக்கும் முன்பு ஒடிஸாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள சத்பயா பகுதியில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு படகில் அழைத்துச் சென்றனர். படகு முதலைகள் அதிகம் உள்ள சிற்றாறில் சென்றபோது கவிழ்ந்தது. இதை பார்த்த சகாதேவ் சமால்(40) என்பவர் ஆற்றில் குதித்து கர்ப்பணிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றினார்.
இந்நிலையில் தொடர்ந்து மழையில் நனைந்து ஆற்றில் நீந்திய அவர் நிமோனியாவால் இன்று பலியானார். சகாதேவ் இறந்தது ஓகிலோபாலா மற்றும் சத்பயா கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படகு கவிழ்ந்ததில் 8 வயது சிறுமி பலியானார். மேலும் 11 வயது சிறுமி மாயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications