லட்சத்தீவின் மினிகாய் அருகே 80கிமீ தொலைவில் ஓகி புயல்! பலத்த மழை,பேய் காற்றும் வீசுவதால் பீதி
ஓகி புயல் லட்சத்தீவின் மினிகாய் பகுதிக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஓகி புயல் லட்சத்தீவின் மினிகாய் பகுதிக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளை சூறையாடிய படியே லட்சத் தீவு நோக்கி நகர்ந்தது.
கடலில் இருந்தபடியே தென் தமிழகத்தையும் தெற்கு கேரளத்தையும் ஆட்டிப்படைத்த ஓகி புயல் ஏராளமான பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.

மினிக்காய் பகுதியில் 80கிமீ
இந்நிலையில் லட்சத்தீவை நெருங்கியுள்ள ஓகி புயல் மினிக்காய் பகுதிக்கு அருகே அரபிக்கடலில் 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

கனமழை நீடிக்கும்
சூறைக் காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு லட்சத்தீவு பகுதியில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே வரவேண்டாம்
கல்பெனி, மினிகாய், கவுரட்டி, அகாட்டி, அடரோத், கடாமத், அம்னி ஆகிய தீவுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் வீடு மற்றும் முகாம்களை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் நோக்கி செல்லக்கூடும்
இந்த ஓகி புயல் மேற்கு நோக்கி நகர்ந்து குஜராத் நோக்கி செல்லக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரள மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications