ஆந்திராவுக்கு 530 கிலோமீட்டர் தொலைவில் பாய்லின் புயல்
விசாகப்பட்டனம்: ஆந்திரக் கரையிலிருந்து வங்கக் கடலில் வடக்கு கிழக்கில் 530 கிலோமீட்டர் தொலைவில் பாய்லின் புயல் மையம் கொண்டிருப்பதாக விசாகப்பட்டனம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டனம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களுக்கான புயல் எச்சரிக்கைச் செய்தியை விசாகப்பட்டனம் புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது....
அதி தீவிர புயலான பாய்லின், கலிங்கப்பட்டனம் அருகே, கிழக்கு மத்திய வங்கக் கடலில், வடக்கு கிழக்கே 530 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு மேற்காக நகர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா இடையே கலிங்கப்பட்டனத்திற்கும், பாரதீப்புக்கும் இடையே கோபல்பூர் அருகே நாளை மாலை கரையைக் கடக்கும்.
இந்தப் புயல் காரணமாக, வடக்கு ஆந்திராவில் இன்று இரவு முதல் மிக பலத்த மழை பெய்யத் தொடங்கும்.
மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும். அடுத்த 12 மணி நேரத்திற்கு இது தொடரும். புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 205 முதல் 215 கிலோமீட்டர் வேகத்திலான காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications