அரை மணி நேரம் லேட்.. கோப்புகளை பிரதமரிடம் கொடுத்து விட்டு.. கடகடவென கிளம்பி சென்ற மம்தா!
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்பை பிரதமர் நேரில் ஆய்வு செய்கிறார்
கொல்கத்தா: புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கொல்கத்தா வந்திருந்த பிரதமருடன் ஆற அமர்ந்து ஆய்வில் பங்கேற்காமல் லேட்டாக வந்து கோப்புகளை பிரதமரிடம் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்று விட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி.
வங்க கடலில் உருவான யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கி.மீட்டருக்கே தெற்கே நேற்று முன்தினம் கரையை கடந்தது... இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
இந்த புயல் காரணமாக 4 பேர் பலியாகிவிட்டனர்.. ஒடிசாவிலும், மேற்கு வங்காளத்தில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. கிட்டத்தட்ட 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன... குறிப்பாக, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் போன்றவைகளின் பாதிப்பு அதிகமாகி உள்ளது.

ஒடிசா
இதுபோலவே, ஒடிசாவில் பாலசோர், பத்ராக் போன்ற மாவட்டங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.. இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பிரதமர்
மேற்கு வங்கத்தில் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிடப்பட்டது. புயலால் ஏற்பட்ட சேத விவரம் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதையடுத்து, இருவரும் மாநிலத்தில் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தனித்தனியாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டன.

ஆய்வு
ஆனால், பிரதமரின் இந்த ஆய்வில், மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.. பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கி அரை மணி நேரத்திற்குப் பிறகு முதல்வர் மமதா உள்ளிட்டோர் அங்கு வந்தனர். பிரதமரிடம் புயல் பாதிப்பு தொடர்பான கோப்புகளை கொடுத்த முதல்வர், பல்வேறு மீட்டிங்குகள் இருப்பதால் தாங்கள் கிளம்புவதாக கூறி விட்டு போய் விட்டனர்.

ஆய்வுக்கூட்டம்
இதனால் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ திபெந்து அதிகாரியும் உடன் இருந்தார். முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஆய்வில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. சாகர் தீவில் இருந்து கலைகுண்டாவை அடைய எப்படியும் 45 நிமிஷங்கள் ஆகும்.. அதுமட்டுமில்லாமல், மாநிலத்தில் சூறாவளி காரணமாக ஏற்பட்ட இழப்பு குறித்த, அறிக்கையை தயார் செய்தும் வருகிறேன்.. இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் நான் ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த அறிக்கையையும் பிரதமரிடம் ஒப்படைத்தார் மம்தா.

மதிப்பீடு
முன்னதாக, யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு சென்றார்.. அங்கு புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒடிசாவில் யாஸ் புயாலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.
-
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications