ஒடிசாவில் அதிகாலையில் கரையை கடந்தது தயே புயல்.. பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை!
வங்கக்கடலில் உருவான தயே புயல் இன்று அதிகாலை ஒடிசாவில் கரையை கடந்தது.
புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான தயே புயல் இன்று அதிகாலை ஒடிசாவில் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்ததால் தெற்கு ஒடிசா மற்றும் கடலோர ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

தயே என பெயர்
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியில் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியது. இதைத்தொடர்ந்து இந்த புயலுக்கு தயே என பெயரிடப்பட்டது.

கரையை கடந்தது
இந்த புயல் இன்று அதிகாலை ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 23 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக புவனேஷ்வர் வானிலை மைய இயக்குநர் ஹெச் ஆர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

கொட்டும் கனமழை
புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். தயே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கஜபதி, கன்ஜம், பூரி, ராயகாடா, காலஹண்டி, கொரபட், நபரங்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மிக கனமழை பெய்யும்
ராயகாடா, காலஹண்டி, கொரபட், நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என்றும் புவனேஷ்வர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பாலங்கீர், பாரஹ், சாம்பல்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை
கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications