பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா.. இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை! ஷாக்கான டிரம்ப்
டெல்லி: பிரிக்ஸ் நாடுகளுடன் நெருக்கமாக இருப்பதால், இந்தியா மீது வரியை விதித்த அமெரிக்கா, தற்போது பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. இதனால் டிரம்பின் நகர்வுக்கு இந்தியா செக் வைத்திருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சகம்
அதாவது பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் (DAC), இந்திய ராணுவத்திற்கு ₹67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்திய ராணுவத்திற்காக, BMP வாகனங்களுக்கு தெர்மல் இமேஜர் அடிப்படையிலான இரவு பார்வை சாதனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது BMP வாகனங்களின் இரவுநேர ஓட்டும் திறனை மேம்படுத்தி, எதிரியின் தாக்குதலை துல்லியமாக முறியடிக்க உதவும்.
ஆயுதங்கள் கொள்முதல்
அதேபோல இந்திய கடற்படைக்கு, சிறிய தானியங்கி மேற்பரப்பு கப்பல், பிரம்மோஸ் ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் லாஞ்சர்கள், அத்துடன் BARAK-1 புள்ளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சிறிய தானியங்கி மேற்பரப்பு கப்பல் கொள்முதல், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளில் அச்சுறுத்தல்களை கண்டறிதல், அதன் தாக்குதலை தடுத்து நிறுத்தும் திறனை கடற்படைக்கு வழங்கும்.
விமானப்படையை மேம்படுத்துதல்
இந்திய விமானப்படையைப் பொறுத்தவரை, மலைப் பகுதி ராடர்கள் மற்றும் சக்ஷம்/ஸ்பைடர் ஆயுத அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதி ராடர்கள் மலைப்பிரதேசங்களில் எல்லைகளிலும், எல்லைகளுக்கு அப்பாலும் வான் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும். சக்ஷம்/ஸ்பைடர் அமைப்பை ஒருங்கிணைந்த வான் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைப்பதன் மூலம், விமான பாதுகாப்பு திறன் மேம்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முப்படைகளின் பலம்
மூன்று படைகளுக்கும் நடுத்தர உயர நீண்ட தூர ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விமானங்கள், பலதரப்பட்ட சுமைகளையும் ஆயுதங்களையும் சுமந்து, நீண்ட தூர பயணங்களுக்கு செயல்படக்கூடியவை. இவை ஆயுதப் படைகளின் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் போர் திறனை கணிசமாக மேம்படுத்தும்.
கூடுதலாக, C-17 மற்றும் C-130J விமானங்களின் பராமரிப்பு, மற்றும் S-400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் விரிவான ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்திற்கும் DAC ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று காலை 03:10 மணிக்கு வெளியிடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
என்ன காரணம்?
பாதுகாப்பு அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அமெரிக்காவின் சமீபத்தில் நிலைப்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. வரி விஷயத்தில் தொடங்கிய இந்த அச்சுறுத்தல் தற்போது, தேச பாதுகாப்பு என்கிற புள்ளிக்கு வந்து நின்றிருக்கிறது.
பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா
அதாவது பாகிஸ்தானில் புதைந்து உள்ள எண்ணெய் வளத்தை வெளியில் கொண்டுவர அமெரிக்கா முன் வந்திருக்கிறது. மறுபுறம் ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்க கூடாது என்றும், பாகிஸ்தானிடம் வாங்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். இது எப்படி பார்த்தாலும் நல்லுறவுக்கான முயற்சியாக தெரியவில்லை. யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை டிரம்ப் எப்படி முடிவு செய்ய முடியும்?
பாகிஸ்தான் எண்ணெய்யை வாங்க மறுத்தால், அந்நாட்டை வைத்து நம்மீது போர் தொடுக்கவும் அமெரிக்கா தயங்காது. எனவே, ராணுவ நிலைகளை பலப்படுத்துவது முக்கியமானதாகும். அந்த வகையில், தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications