என் அப்பா ரொம்ப சென்சிடிவ்: மன்மோகன் மகள் தமம் சிங்
டெல்லி: எனது தந்தை சூழ்ச்சி நிறைந்த அரசியல்வாதியோ அல்லது அரசியல் வியாபாரியோ அல்ல. அவருக்கு காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட எதிர்ப்புக்கள் உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் தமம் சிங் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை குறித்த சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக புத்தகம் ஒன்றை தமம் எழுதி உள்ளார். "ஸ்டிரிக்ட்லி பர்சனல், மன்மோகன் அன் குர்சரன்" என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், மன்மோகன் சிங்கின் வாழ்க்கை ரகசியங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளது.

சஞ்சய் பாரு, நட்வர்சிங் ஆகியோர் எழுதி உள்ள புத்தகங்களால் மன்மோகன் சிங் பதவிகாலம் பல சர்ச்சைகளை ஏற்படத்தி உள்ள நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு தமம் பேட்டி அளித்துள்ளார்.
நம்பிக்கை இல்லையா?
2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி காங்கிரஸ் 2வது முறையாக ஆட்சிக்கு வரும் என மன்மோகன்சிங் நம்பிக்கை இல்லாமல் இருந்ததாக தமம்சிங் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி கருத்து கூறியுள்ள தமம்,தாங்கள் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம் என தனக்கு நம்பிக்கை இல்லை என எனது தந்தை கூறினார். இதனை அவர் சாதாரணமாகத் தான் கூறினார்.
நிதியமைச்சர் ஆனது எப்படி?
என் தந்தையை போனில் அழைத்த நரசிம்மராவ், ஒரே இரவில் அவரை நிதியமைச்சர் ஆக்கிவிட்டார். மேலும் ஒரு மாதத்திற்குள் பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பையும் என் தந்தையிடம் அளித்தார். அப்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது. நரசிம்மராவே அனைத்தையும் முடிவு செய்தார். அவருக்கு தெரியாமல் என் தந்தை எதையும் செய்யவில்லை.
மைனாரிட்டி அரசு
நிதி நிலைமையை சரி செய்வதற்காக எடுக்கப்பட்ட யோசனைகள், அணுகுமுறை ஆகியவை என் தந்தை அளித்தார். ஆனால் அவற்றை நரசிம்மராவ் அவற்றை அரசியல் ஆக்கி விட்டார். இது மைனாரிட்டி அரசு என்பதால் அனைத்தையும் உடனடியாக செய்து விட முடியாது எனவும், மேலும் 5 ஆண்டுகள் எனக்கு அவகாசம் கொடுத்தால் நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் நிதி நெருக்கடியை நான் சமாளிக்கிறேன் என எப்போதும் கூறுவார்.
கட்சிக்குள் எதிர்ப்புகள்
இது மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதால் உடனடியாக எல்லாவற்றையும் மாற்றுவது சிரமமானது. தான் என்ன செய்கிறோம் என மக்களுக்கு தெளிவுபடுத்த என் தந்தை விரும்பினார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஏராளமான எதிர்ப்புக்கள் இருந்தது.
அமெரிக்காவின் ஏஜெண்ட்
சி.சுப்ரமணியன் எனது தந்தையை பெரிதும் கவர்ந்த சிறந்த மனிதர். பசுமை புரட்சியை ஏற்படுத்த நிலைத்தவர் என எனது புத்தகத்தில் நான் அவர் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அரசியல் ரீதியாக அவர் அமெரிக்காவின் ஏஜண்ட் என கூறப்பட்டார். அந்த குற்றச்சாட்டில் இருந்து வெளிவர முடியாமல் அவர் தனது பதவியை இழந்தார். முன்னோடிகள் எப்போதும் பாராட்டப்படுவதும் இல்லை, அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளப்படுவதும் இல்லை.
சூழ்ச்சி தெரியாது
எனது தந்தை அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என நான் நினைக்கவில்லை; ஆனால் அவருக்கு அரசியல் சூழ்ச்சி தெரியாது. என் தந்தை எதை செய்தாலும் அதை குறை கூறியவர்களுக்கும், அவரை எதிர்த்தவர்களுக்கும் நடுவிலேயே அவர் இருந்து வந்தார்.
துணிவோடு கையாண்டார்
அவர் பயந்து ஓடும் அரசியல்வாதி அல்ல; சவால்களை முன்வந்து எதிர்கொண்டார். தனது பாதுகாப்பை பற்றி நினைக்காமல் பிரச்னைகளை துணிவுடன் கையில் எடுத்து கையாண்டார். 1991ல் அவர் அரசியலில் சேர்ந்த போது இது போன்ற கேள்விகள் வரவில்லை. அவர் நிதியமைச்சராகவும் மற்ற பொறுப்புக்களுக்கு வந்த போது தான் எழுந்தது. அவர் தனது வேலையுடன் தான் அரசியலையும் கவனித்தார். வேலை இல்லாமல் அரசியலில் சேர்ந்திருந்தால் பொருளாதார சிக்கலில் சிக்கி அவரது வாழ்க்கையும் சிதைந்திருக்கும்.
தந்தையை உற்சாகப்படுத்திய அன்னை
சஞ்சய் பாரு, நட்வர்சிங் ஆகியோரின் புத்தகங்ளையும் படித்தேன். அதில் நட்வர்சிங்கின் புத்தகங்கள் அரசியல் சார்ந்தது. எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளதாலேயே நான் புத்தகம் எழுதி உள்ளேன். எனது பெற்றோர்களை தனிமனிதர்களாக காட்டவே நான் விரும்புகிறேன். அவர்களது வாழ்க்கை, அவர்கள் எதிர்கொண்ட வித்தியாசமாக சூழ்நிலைகள் ஆகியவற்றை என்னிடம் பகிர்ந்து கொள்வதை அவர்கள் விரும்புவதாக நான் நினைக்கிறேன். என் தந்தைக்கு மிகப் பெரிய சக்தியாக அவருக்கு பின் இருப்பது என் அம்மா. என் தந்தை நிதியமைச்சராக இருந்த போதும், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போதும் அவரை உற்சாகப்படுத்தி உள்ளார்.
தனி அறிவு தேவை
பிரதமர் பதவி என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய பொறுப்புக்கள் நிறைந்தது. அவர் அந்த பதவிக்கு தயாராவதற்கு முன் அவரிடம் பிரதமர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. என் தந்தையை போன்று சவால்களை எதிர்கொண்டவர் வேறு யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த நாட்களில் பிரதமர் பொறுப்பு அளிக்கப்பட்டு, அமைச்சரவையை உருவாக்கி அவற்றை வழிநடத்த வேண்டிய சூழ்நிலை அவருக்கு கொடுக்கப்பட்டது. அரசு துறையில் இருந்தால் மட்டுமே தெரியும், அதில் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும், நிர்வகிப்பது எப்பது, அது தொடர்பாக தகவல்கள், அறிவு, சூழ்நிலைக்கு தகுந்தால் போல் செயல்படுவது என எத்தனையோ உள்ளது. அவற்றை புரிந்து கொள்வதற்கும் தனிஅறிவு வேண்டும்.
அரசியல் வேறு வாழ்க்கை வேறு
எங்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் தெளிவாக இருந்தோம். என் தந்தை மீது ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து அது சர்ச்சை ஆக்கப்பட்ட போது நாங்கள் எது பற்றியும் கருத்து கூறவில்லை. ஆனால் நடந்த பல விஷயங்கள் கவலை அளிப்பதாக இருந்தது.
வேதனைக்குள்ளாக்கிய விசயம்
குற்றப்பின்னணி எம்.பி.,க்கள் தொடர்பான மசோதா விவகாரத்தில் ராகுல் நான்சென்ஸ் என கூறியதால் குடும்பத்தில் உள்ளவர்கள் பிரதமரை ராஜினாமா செய்ய சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அது நடந்த சமயத்தில் என் தந்தை அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தார். அதற்காக அவர் வருத்தப்பட்டார். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இது போன்ற பல விஷயங்கள் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் உங்களை விட என்னை விட மிகவும் சென்சிடிவானவர். ஆனால் தேவையில்லாமல் தனது உணர்வை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.
விமர்சனங்களால் பாதிப்பு
என் தந்தை நிதியமைச்சராக இருந்த போது தனிப்பட்ட ரீதியிலும், பணியிலும், அரசியல் ரீதியாகவும் அவரை பற்றி எழுந்த சர்ச்சைகள் எங்களை பாதிக்கவில்லை. அவர் அமெரிக்க பிரதிநிதி போன்று செயல்படுகிறார் என்பது போன்ற விமர்சனங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் திறமை பற்றி எங்களுக்கு தெரியும். ஆனால் அவர் பிரதமரான பிறகு வந்த விமர்சனங்களால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் செய்தி தாள்களை படிப்பதோ டிவி பார்ப்பதோ இல்லை. ஆனால் இந்த விமர்சனங்களால் எனது மகன் அவனது பள்ளியில் மிகவும் பாதிக்கப்பட்டான்.
சோனியாவுடனான உறவு?
என் தந்தைக்கும் காங்கிரஸ் தலைவிக்குமான உறவினைப் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். என் தந்தை அறிவுபூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் அவர் வலிமையான மனிதர். அவரது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் 10 ஆண்டுகள் பிரதமர் என்பது ஒரு பகுதிதான்.
ஏழைகளின் வாழ்வுக்காக
1981ல் மிகவும் மோசமாக இருந்த நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியவர் அவர். மக்கள் அவரை பற்றி கூறி கருத்துக்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் எப்போதும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவறத்காகவே பணியாற்றியவர் என்று கூறியுள்ளார் தமம் சிங்.












Click it and Unblock the Notifications