ஐ.டி சிட்டி டூ டெம்பிள் சிட்டி.. பெங்களூர்-மதுரைக்கு விமான சேவை அறிமுகம்!
பெங்களூர்: பெங்களூரில் இருந்து மதுரைக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது ஏர் பெகசஸ். வரும் 26ம் தேதி முதல் இச்சேவை தொடங்க உள்ளது.
இது குறித்து ஏர் பெகசஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஜூன் 20ம் தேதி பெங்களூருவிலிருந்து மதுரைக்கு முதல் விமான சேவை தொடங்கப்படும். வாரத்தில் திங்கள், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் பெங்களூரு-மதுரை இடையே விமானங்கள் இயக்கப்படும்.

விமான சேவை உள்ள நாட்களில் பெங்களூருவில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, 11.30 மணிக்கு மதுரையை சென்றடையும். 11.50 மணியளவில் மதுரையிலிருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 12.35 மணியளவில் பெங்களூருவைச் சென்றடையும்.
இதற்கான அறிமுக கட்டணம் ரூ. 1234 ஆகும். திங்கள்கிழமை (இன்று) முதல் விமான பயணத்திற்கான முன்பதிவு செய்யப்படும். விரைவில் கர்நாடகம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களுக்கு விமான சேவை வழங்குவது என முடிவு செய்துள்ளோம்.
முதல் நிலை நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம நிலை நகரங்களுக்கு விமான சேவையை குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அனைவரும் பரவலாக விமானத்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். இதன் மூலம் குறைந்த நேரத்தில் நீண்ட பயணங்கள் செல்வது சாத்தியமாகியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications