தலித் மாணவர் தற்கொலை: ஸ்ம்ருதி இரானிக்கு எதிர்ப்பு- 10 தலித் பேராசிரியர்கள் ராஜினாமா
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.சி./எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் 10 பேர் தங்களது நிர்வாகப் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹைதரபாத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்து இருந்த மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி, ''மாணவர் ரோகித் தற்கொலை தலித் மற்றும் தலித் அல்லாத மாணவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் அல்ல என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் 10 பேர் தங்களது நிர்வாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து மாணவர் நலன் மற்றும் எஸ்.சி/ எஸ்.டி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அமைப்பின் டீன் பிரகாஷ் பாபு கூறுகையில், ''தேசத்தை மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி திசை திருப்புகிறார். இந்த நிர்வாகத்தின் கீழ் நாங்கள் பணியாற்ற மாட்டோம். பல்கலை நிர்வாகக் கவுன்சிலில் தலித் உறுப்பினர்கள் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் தலித் அமைப்பைச் சேர்ந்த 20 ஆசிரியர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதால் தற்போது 10 பேர் மட்டும் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாணவர்களை திரிணமுல் கட்சி சார்பில் தேரிக் ஒ' பிரைனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரியும் சந்தித்துப் பேசினர். இன்று மாணவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசுகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications