காவிரி.. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
Recommended Video

டெல்லி: காவிரி தொடர்பாக தமிழகம் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் கேட்பு மனுவையும், இணைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், காவிரி பங்கீட்டை செயல்படுத்த ஒரு செயல் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் 6 வாரங்கள் கழித்த பிறகும், எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தது தமிழக அரசு.
அதே நாளில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதாவது, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்த 'ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்தது.
தமிழக அரசின் மனுவை வரும் 9ம் தேதியான, திங்கள்கிழமை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், மத்திய அரசின் விளக்க கேட்பு மனுவையும், விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இரு மனுக்களையும் இணைத்து 9ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications