அக்காவைப் போட்டுக் கொடுத்த தங்கை.. கையும் களவுமாக சிக்கிய பயங்கர குற்றவாளி.. பஞ்சாபில் கலகல!
அக்காள், தங்கையுடன் டேட்டிங் என இருந்த ரவுடி சக்காளத்தி சண்டையால் சிறை செல்ல நேரிட்டது.
Recommended Video

சண்டீகர்: அக்காள், தங்கையுடன் டேட்டிங் என இருந்த ரவுடி அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் சிறை செல்ல நேரிட்டது.
சண்டீகரை சேர்ந்தவர் தில்பிரீத் சிங். இவர் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை சண்டீகர் மற்றும் பஞ்சாப் போலீஸ் தேடி வருகிறது. இந்நிலையில் இவர் காபூர்தலா சிறையில் இருந்தபோது ஹர்பிரீத் கௌர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் தில் பிரீத் வெளியே வந்தவுடன் அவரும் ஹர்பிரீத் கௌரும் நண்பர்களாகிவிட்டனர். ஹர்பிரீத் கௌர் நவான்ஷாஹர் என்ற பகுதியில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

தங்கையுடன் நட்பு
இந்நிலையில் தில்பிரீத்தும் ஹர்பிரீத்தும் நவான்ஷாஹர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இதைத் தொடர்ந்து ஹர்பிரீத்துக்கு தெரியாமல் தங்கை ரூபீந்தர் கௌருடன் நட்பானார் தில்பிரீத்.

தங்கையுடன் வேறு வீட்டில்
இந்நிலையில் தனது வீட்டை சண்டீகரில் உள்ள வாஹேகுரு காலனியில் மாற்றினார். இதனிடையே ஹர்பிரீத் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணவனால் கைவிடப்பட்ட ஹர்பிரீத்தின் தங்கை ரூபீந்தர் கௌரை வேறு ஒரு வீட்டில் வசிக்குமாறு தில்பிரீத் அறிவுறுத்தினார்.

பெயர் மாற்றம்
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரூபீந்தருடனும் குடும்பம் நடத்தினார். தாடியையும் முடியையும் டிரிம் செய்துவிட்டு மாறு வேடத்தில் இருந்தார். மேலும் தனது பெயரை ககன்தீப் சிங் என்று மாற்றிக் கொண்டார்.

சக்காளத்தி சண்டை
இந்நிலையில் தனது தங்கையுடன் தில்பிரீத் வாழ்ந்து வருவதை அறிந்த ஹர்பிரீத் தங்கையுடன் சண்டையிட்டார். இந்த சக்காளத்தி சண்டை போலீஸ் நிலையம் வரை சென்றது. இதையடுத்து சகோதரிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நவான்ஷாஹர் வீட்டில்
இதில் தில்பிரீத்தான் மாறுவேடத்தில் தங்களுடன் குடும்பம் நடத்தியதை இருவரும் கூறிவிட்டனர். போதை பொருட்கள், ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஆகியன தனது அக்காள் வசித்த நவான்ஷாஹர் வீட்டில் வைத்திருந்ததை ரூபீந்தர் போட்டு கொடுத்தார்.

வெடி மருந்து விற்பனை
தில்பிரீத் அபினி என்ற போதை பொருளை உட்கொள்வதுடன் ஹெராயினையும் எடுத்துக் கொண்டார் என்றும் அவர் ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் போதை பொருட்களை விற்றதாகவும் சகோதரிகள் போட்டு கொடுத்தனர். இதையடுத்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாறுவேடத்தில் இருந்த ரவுடி தில்பிரீத்தை போலீஸார் கைது செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications