பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமை 'பாதுகாக்கும்' விசுவாச அரசியல்வாதிகள்...!
டெல்லி: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியாவில் உள்ள சில அரசியல் சக்திகளே தொடர்ந்து காப்பாற்றி வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக செயல்பட்டவன் தாவூத் இப்ராகிம்.. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கியிருக்கிறான்...

மகாராஷ்டிரா உ.பி அரசியல்வாதிகள்..
தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு உயிரோடு பிடித்து வந்தால் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான அரசியல்வாதிகளின் உண்மை முகம் அம்பலமாகிவிடும்... தாவூத் இப்ராகிமின் ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தலுக்கு பக்க பலமாக இருந்தவர்களும் இவர்களே..

2 தலைவர்களுக்கு ரூ14 கோடி..
1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டைகர் மேமன் குடும்பத்தினரும் தமது அடியாட்களும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்வதற்கு 2 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ரூ14 கோடியை கொடுத்தவன் தாவூத். இதேபோல் உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத ஆயுத விற்பனையை கனஜோராக நடத்தியவன் தாவூத்.. அங்கும் அரசியல் தலைவர்களே தாவூத்துக்கு பாதுகாப்பானவர்களாக இருந்தனர்..

3 முறை நெருங்கியும்....
கராச்சியில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமை இதற்கு முன்னர் உளவுத்துறையினர் மூன்று முறை நெருங்கிய போது கடைசிநேர முக்கிய தலைவர்கள் சிலரது உத்தரவால் அது நிறைவேறாமல் போயிருக்கிறது.. அந்த தலைவர்களுக்கு மகாராஷ்டிரா போலீசில் உள்ளவர்களே தகவல்களை தெரிவித்துவிடுகின்றனர்.

விசுவாச அரசியல் தலைவர்கள்..
அண்மையில் கூட மத்திய அமைச்சர் வி.கே.சிங், ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுப் படுகொலை செய்தது போல தாவூத்தை வீழ்த்த இந்தியாவால் முடியும் எனக் கூறியிருந்தார். ஆனால் அவனை சுற்றி வளைக்கவிடாமல் அரசியல் தலைவர்களே தொடர்ந்தும் தடுத்து வருகின்றனர். இதனால்தான் தாவூத் இப்ராகிமை கைது செய்ய முடியாமல் விழிபிதுங்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்..
-
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
ஒரே நொடி.. மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்! வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.. திக்திக் -
உடல் வெடித்து சிதறிய பாக்., ராணுவ வீரர்கள்..ரயிலில் தற்கொலைப்படை தாக்குதல்.. BLA–வின் ஷாக் பின்னணி -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications