பெனாசிர் பூட்டோ ரோட்டில் உள்ள வீட்டில் தாவூத்.. ஒளித்து வைத்துள்ள பாக்.. கண்டுபிடித்த இந்தியா!
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இருக்கும் புதிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானில் உள்ள மர்ரீ ரோடு அதாவது பெனாசீர் பூட்டோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தாவூத் கராச்சியில் இருப்பதை உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தாவூதை பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளதாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
தாவூதின் புதிய இடம்
ராவல்பின்டிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே இந்த மர்ரீ ரோடு வீடு உள்ளது. தாவூத் பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அரசு தாவூதை நாட்டை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்ய இது உகந்த நேரம் இல்லை. பாகிஸ்தான் அரசு தாவூதை கராச்சி மற்றும் மர்ரீ ரோட்டுக்கு இடையே உள்ள பகுதியில் அவ்வப்போது இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும்.
இந்தியாவில் பினாமி பெயர்களிலும், போலியான பெயர்களிலும் உள்ள தாவூதின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு அவர் ஐஎஸ்ஐக்கு உதவ முடியாமல் போகும். தனது தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதால் ஐஎஸ்ஐ தாவூதின் பக்கம் உள்ளது. அவர் தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை தனது பாதுகாப்புக்காக அளிக்கிறார்.
தாவூதின் சொத்துக்களை முடக்கி, அவரது போதைப் பொருள் வியாபாரத்தை தடுத்து நிறுத்தினால் அவரின் வருமானம் பாதிக்கப்படும் என்று இந்தியா கருதுகிறது. இது தவிர தாவூதின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இன்டர்போலிடம் தெரிவிக்கப்பட உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications