4 வயது சிறுவனின் வயிற்றில் உயிரற்ற கரு... ஆபரேஷன் மூலம் அகற்றம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வயிற்று வலியால் துடித்த 4 வயது சிறுவனின் வயிற்றில் உயிர்த் துடிப்பற்ற குழந்தையின் கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சமீபகாலமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அச்சிறுவனின் வயிற்றுக்குள் உயிரற்ற கரு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைகள், கால்கள், நகங்கள், பாதி தலை வளர்ந்த நிலையில் சுருண்டு கிடந்த அந்த கருவை, மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மருத்துவ உலகில் மிகவும் அரிதாக நடக்கும் சில விசித்திரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இது தொடர்பாக அச்சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சிர்ஷேந்தர் கிரி கூறுகையில், "கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். இரட்டைக் கருவுறுதல் நடந்து, அதில் ஒரு கரு முட்டை தொப்புள் கொடி வழியாக மற்றொரு கருவிற்குள் நுழைந்து ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் வளர்ச்சி நின்றுவிடும்.
குழந்தை பிறந்தபின்னர் வயிற்றில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது கருவுக்குள் கரு எனப்படும். ஐந்து அல்லது ஆறு லட்சம் பெண்களில் ஒருவருக்கு இதுபோன்ற அரிதான கருவுறுதல் நடைபெறும்" என்றார்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications