ஹர்ஹத் உல் அன்சார் இயக்கத்தின் முடிவும் லஷ்கர் இ தொய்பாவின் விஸ்வரூபமும்..
டெல்லி: தீவிரவாத இயக்கமான ஹர்ஹத் உல் அன்சார் அமைப்புக்கு அளித்த ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து லஷ்கர் இ தொய்பா இயக்கம் உருவெடுத்தது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தகவல்கள் தெரிவிக்கின்றன.
1990களில் இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்துக்கு பாகிஸ்தான் ஹர்ஹத் உல் அன்சார் என்ற தீவிரவாத அமைப்பை ஊக்குவித்து வந்தது. காஷ்மீரிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் இந்த ஹர்கத் உல் அன்சார் அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்த அமைப்புக்கு சுமார் 60 ஆயிரம் டாலரை பாகிஸ்தான் நிதி உதவியாக அளித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஹர்ஹத் உல் அன்சார் அமைப்பான விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. இதனால் பாகிஸ்தான் அச்சப்பட்டு இந்த அமைப்பை ஒதுக்கி வவத்தது.
இதன் பின்னரே ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன், ஜெய்ஷி இ முகமது ஆகிய அமைப்புகள் உருவாகின. ஹர்கத் உல் அன்சார் அமைப்பில் இருந்த தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் ஹர்ஹத் உல் முஜாஹிதீன் அமைப்பில் இருக்கின்றனர்.
இருப்பினும் ஒரிஜினல் ஹர்ஹத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீருக்கு எதிரான அல் பஹ்ரான் என்ற அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹர்கத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளை பிரித்து வைப்பதும் பின்னர் ஒரே அமைப்பாக்குவதும் என்கிற வேலையை பாகிஸ்தான் உளவு அமைப்பனா ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து செய்து வருகிறது.
ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்புதான் பல்வேறு முக்கிய தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. இதுதான் கந்தகார் விமானக் கடத்தலை முன்வைத்து மவுலானா மசூத் அன்சாரை விடுவித்தது.
இதற்குப் பிறகுதான் மவுலானா மசூத் அன்சார், ஜெய்ஷி- யே- முகமது அமைப்பை தொடங்கினார். இப்படி இருந்த பல்வேறு தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து லஷ்கர் இ தொய்பா அமைப்பை உருவாக்கியது பாகிஸ்தான்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஹர்ஹத் உல் அன்சார் அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் மறு உருவாக்கமாக லஷ்கர் இ தொய்பா விஸ்வரூபமெடுத்துள்ளது.
இவ்வாறு சி.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications