மும்பையில் களைகட்டும் தீபாவளி விற்பனை: மார்க்கெட்டுகளில் அலைமோதும் கூட்டம்
மும்பை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் விற்பனை களைகட்டி வருகிறது. மும்பையில் தாதர், கிராபர்டு மார்க்கெட், கல்பாதேவி, பாந்திரா லிங் ரோடு, சர்ச்கேட், மலாடு, போரிவிலி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி என்றாலே, பட்டாசு, பலகாரம், கூடவே உற்சாகமும் சேர்ந்து கொள்ளும். பண்டிகைக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மும்பையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 9ம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான ‘தந்தராஸ்' கொண்டாடப்படுகிறது.

மும்பையில் தீபாவாளி
விடுமுறை நாளான ஞாயிறன்று மும்பையில் உள்ள பிரதான சந்தைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். இதன் காரணமாக தாதர், கிராபர்டு மார்க்கெட், கல்பாதேவி, பாந்திரா லிங் ரோடு, சர்ச்கேட், மலாடு, போரிவிலி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பட்டாசு, பலகாரம்
இதைப்போல் மஜித் பந்தர் பகுதியில் பட்டாசு விற்பனை களை கட்டி வருகிறது. தாராவி பகுதியில் விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. குடும்பத்தினருடன் வந்த பொதுமக்கள் புத்தாடைகள், அலங்கார விளக்குகள், பட்டாசு, இனிப்பு வகைகள் மற்றும் கலர் கோலப்பொடிகளை வாங்கிச்சென்றனர்.

விலை உயர்வு
தீபாவளி பண்டிகை மட்டுமின்றி அதற்காக பொருட்கள் வாங்க வருவதே மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு தான். கடந்த ஆண்டை விட பட்டாசு, ஆடைகள் என எல்லாப்பொருட்களும் 10 சதவீதம் விலை அதிகரித்து உள்ளது'' என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

படையெடுக்கும் மக்கள்
முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் தான் மக்கள் ஜவுளிக்கடை நோக்கி படையெடுப்பார்கள். தற்போது 3 மாதங்களுக்கு முன்பே கூட தீபாவளிக்காக ஆடைகளை வாங்கிவிடுகின்றனர். விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த 2 நாட்களாக பிரதான மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மக்களின் வருகை அதிகரிக்கும் என்று விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications