சபாநாயகர் நிராகரித்த பின்னர் மீண்டும் ராஜினாமா செய்த 13 சீமாந்திரா எம்.பிக்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக 13 சீமாந்திரா எம்.பி.க்கள் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்த நிலையில் மீண்டும் ராஜினாமா செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் எஸ்.பி.ஒய். ரெட்டி, ஹர்சகுமார், சாய் பிரதாப், ராஜகோபால், அனந்தவெங்கடராமி ரெட்டி, அருண்குமார், மாகுண்ட சீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ், சப்பம்ஹரி, பாப்பிராஜு கனுமுரு ஆகிய 10 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
ஜெகன்மோகன் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர்கள். கொகைல்ல நாராயணா என்பவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர்.

சபாநாயகர் நிராகரிப்பு
சபாநாயகர் மீராகுமார் இந்த 13 எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தார். நேற்று அவர் 13 எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்க இயலாது என்று நிராகரித்துவிட்டார்.

7 எம்.பிக்கள் நேரில் சந்திப்பு
இதைத் தொடர்ந்து சபாநாயகர் மீராகுமாரை 7 எம்.பி.க்கள் நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் மீராகுமார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினார்.

மீண்டும் ராஜினாமா
இதனால் அதிருப்தி அடைந்த சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் 13 பேரும் மீண்டும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

வழக்கு தொடர முடிவு
இதேபோல் சபாநாயகர் மீராகுமாரின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். நாங்கள் முறைப்படி சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தோம். ஆனால் அதனை சபாநாயகர் நிராகரித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே இதை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ராஜ்மோகன் ரெட்டி, எஸ்.பி.ஒய். ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications