டான்ஸ் ஷோ வெறி... ஜெயிலில் இருந்து ரிலீசானதும் பாட்டியைக் கொன்று நகையைத் திருடிய சிறுவன்!
டெல்லி: டான்ஸ் ஷோவில் பங்கேற்பதற்காக டெல்லியில் மூதாட்டியைக் கொலை செய்து அவரது நகைகளைத் திருடிச் சென்ற 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் டெல்லி பி.கே.தத் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் முதல் மாடியில் வசித்து வந்த மிதிலேஷ் ஜெயின் என்ற 65 வயது பெண் சமீபத்தில் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரை இழந்து தனிமையில் வசித்து வந்த மிதிலேஷ் இயற்கையான முறையில் மரணமடைந்ததாக போலீஸ் தரப்பு கூறியது.

ஆனால், வீட்டில் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தின் போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 17 வயது சிறுவன் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த அச்சிறுவனை பரிதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் இன்று போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டான்ஸ் ஷோ ஒன்றில் பங்கேற்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காகவே மிதிலேஷைக் கொலை செய்து அவரது நகைகளைத் திருடிச் சென்றதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
அது மட்டுமின்றி ஏற்கனவே டான்ஸ் ஷோவில் பங்கேற்பதற்காக கடந்தாண்டு 13 வயது சிறுவனைத் தன் தோழியோடு சேர்ந்து கொலை செய்துள்ளான் இச்சிறுவன். அதற்காக சிறை சென்றிருந்த அச்சிறுவன் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆகியுள்ளான்.
சிறையில் மனம் திருந்தாத அச்சிறுவன் வெளியில் வந்ததும், டான்ஸ் மீது இருந்த தீராதக் காதலால் மீண்டும் கொலை செய்து போலீசிடம் சிக்கியுள்ளான்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி இன்னும் சில தினங்களில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்குள்ளாக அவர் கொலை செய்யப்பட்டு விட்டார் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications