டெல்லியில் ஓடும் வேனுக்குள் கோஷ்டி மோதல்: திகார் சிறைக் கைதிகள் 2 பேர் பலி!
டெல்லி: டெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது ஓடும் வேனுக்குள் திகார் சிறைக் கைதிகள் கோஷ்டியாக மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி திகார் சிறையில் இருந்து ரோகினியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 9 கைதிகளை ஒரு வேனில் சிறை அதிகாரிகள் 2 பேர் ஏற்றிச் சென்றனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மாலை 4.30 மணி அளவில் மீண்டும் சிறையில் அடைப்பதற்காக வேனில் கொண்டு வந்தனர்.
அந்த வேன் திகார் சிறைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வேனுக்குள் இருந்த கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்புக்கு சென்ற 2 சிறை அதிகாரிகளும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேனை நேரடியாக அவுட்டர் டெல்லியின் மங்கலபுரி பகுதியில் உள்ள பகவான் மகாவீர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறை அதிகாரிகள் படுகாயம் அடைந்த கைதிகளை சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற 5 கைதிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications