காருக்குள் 60 வயது முதியவர் வெறியாட்டம்.. மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை!
டெல்லியில் காருக்குள் வைத்து தனது மனைவியைக் கொன்ற 60 வயது கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் 58 வயதுப் பெண்ணை அவரது 60 வயதுக் கணவர் மிகக் கொடூரமான முறையில் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் வைத்து தனது மனைவியை கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார அந்த முதியவர். போலீஸார் தறபோது அவரைக் கைது செய்துளளனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தக் கொலைக்கு காரணமாக போலீஸார் கூறுவது, சம்பவத்தன்று யாரோ ஒரு ஆணுடன், அந்தப் பெண் போனில் பேசிக் கொண்டிருந்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே.
அந்த நபரின் பெயர் முகேஷ். இவரது மனைவி பெயர் மஞ்சு. நேற்று இரவு 11.30 மணியளவில் வெளியில் போய் விட்டுத் திரும்பியுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் ஹரிநகரில் உள்ள அபார்ட்மென்ட்டை அடைந்ததும் காருக்குள் வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் முகேஷ். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மஞ்சு மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸார் விரைந்து வந்து முகேஷைக் கைது செய்தனர். தங்களது தாயார் குறித்து போலீஸாரிடம் அவரது மகனும், மகளும் கூறுகையில், எங்களது தாயார்தான் வேலைக்குப் போய் சம்பாதித்து வந்தார். எங்களது தந்தை சரியாக வேலைக்குப் போவதில்லை, சம்பாதிப்பதில்லை என்று போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
முகேஷ் குடிப்பழக்கம் உள்ளவராம். அடிக்கடி மஞ்சுவை அடிப்பது வழக்கமாம். ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் மஞ்சு. அவர் மீது சந்தேகம் கொண்டு சண்டை பிடிப்பது முகேஷின் வழக்கம் என்கிறார்கள். நேற்றும் கூட மஞ்சு யாரோ ஒரு ஆணுடன் பேசியதுதான் முகேஷை ஆத்திரமடைய வைத்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், மனைவியை திட்டமிட்டு முகேஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications