டெல்லி தாக்குதல்.. பயங்கரவாதி உமர் பணியாற்றிய பல்கலைக்கழக நிறுவனர் கைது.. அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு தற்கொலை படை தாக்குதல் தான் என்பது உறுதி செய்துள்ளது. மேலும் அந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் என்பவன் தான் நடத்தியது உறுதியாகி உள்ளது. இந்த உமர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அதன் நிறுவனர் ஜாவேத் அஹகமது சித்திக்கை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் கடந்த 10ம் தேதி மாலையில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. இந்த கார் வெடிப்பில் 10 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர்.

இதன் பின்னணியில் பயங்கரவாத சதி இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. டெல்லி போலீசார், என்ஐஏ உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த உமர் உன் நபி என்பவன் தான் கார் வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.
தற்கொலை படை தாக்குதலாக அவன் இந்த தாக்குதலை நடத்தினான்., டாக்டரான அவன் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து உமருக்கு உதவி செய்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். உமருக்கு கார் வழங்கிய அமீர் ரஷித் அலி என்பவனை என்ஐஏ கைது செய்தது.
இதன் அடுத்தக்கட்டமாக தான் தற்போது உமர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தின் நிறுவனர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜாவித் அஹமது சித்திக். இவரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனம் ஜாவேத் அஹமது சித்திக்கின் வீடு, அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். ரூ.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிவைசஸ் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த பல்கலைக்கழகத்துக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து சட்டத்துக்கு அப்பாற்பட்டு ஜாவேத் அஹமது சித்திக் தனது குடும்பத்தினருக்கும், அவர்களின் நிறுவனத்துக்கும் பணத்தை மாற்றி இருப்பது தெரியவந்தது. இந்த சோதனையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பயங்கரவாத செயலுக்கும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பாக டெல்லி செங்கோட்டை அருகே உமர் நிகழ்த்திய கார் வெடிப்பு சம்பவத்துக்கு பணம் சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் சட்டவிரோதமாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications