For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எலெக்ட்ரிக் ரிக்‌ஷா மோதி கொதிக்கும் சர்க்கரைப் பாகில் விழுந்த சிறுவன் பலி!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பால் வாங்கச் சென்ற தாய் மற்றும் மகனின் மீது எலக்ட்ரிக் ரிக்‌ஷா மோதியதில் கொதிக்கும் சர்க்கரைப் பாகில் விழுந்து மகன் பலியானார்.

டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், அவருடைய மகன் தேவ் ஆகியோர் பால் வாங்குவதற்காக அங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பின்புறமாக வந்த எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று அச்சிறுவன் மீது மோதியது.

கொதிக்கும் சர்க்கரை பாகு:

அதில் அவன் அங்கிருந்த கடை ஒன்றின் அண்டாவில் கொதித்துக்கொண்டிருந்த சர்க்கரை பாகில் போய் விழுந்துவிட்டான்.

கைவிட்டு தூக்கிய தாய்:

இதை கண்டு பதறிய தாய் கொதிக்கும் சர்க்கரை பாகில் தனது கைகளை விட்டு மகனை தூக்கினார். இதனால் தாயின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி:

பின்னர் சிறுவனை அருகிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த சிறுவன்:

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிறுவன் தேவ் உயிரிழந்தான். கைகளில் காயமடைந்த தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் ஓட்டம்:

இச்சம்பவத்திற்கு காரணமான ரிக்‌ஷா டிரைவர் சம்பவ இடத்தில் ரிக்‌ஷாவை விட்டு விட்டு ஒடிவிட்டார்.

போலீஸ் விசாரணை:

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மயூர் விகார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A three-year-old boy lost his life when he fell in a cooking pot containing boiled sugar syrup after being hit by an e-rickshaw in east Delhi's Trilokpuri on Tuesday evening. The boy was in his mother's lap when they were hit by the e-rickshaw from behind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X