டெல்லி சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி தொடக்கம்! 26-ஆம் தேதி ஆம் ஆத்மியின் முதல் பட்ஜெட்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் நடப்பு நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் வரும் 26-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரின்போது இரண்டு அல்லது மூன்று முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
மின்சாரத்துக்கான மானியம் வழங்கும் திட்டம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. டெல்லியில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், இதை மேலும் நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications