For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழியர்களிடம் பிடித்த வருமான வரியை செலுத்தாத விவகாரம்: கலாநிதி மாறனுக்கு டெல்லி கோர்ட் சம்மன்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பிடித்த வருமான வரியை வருமான வரித்துறையிடம் செலுத்தாத வழக்கில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வசம் முன்னர் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் வருமான வரி பிடிக்கப்பட்டது.

Delhi court summons to Kalanidhi Maran on IT case

ஆனால் பிடிக்கப்பட்ட தொகையை வருமானவரித்துறையிடம் கலாநிதி மாறன் தலைமையிலான நிர்வாகம் செலுத்தவில்லை. இது தொடர்பாக வருமானவரித்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கலாநிதி மாறனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கும் டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது அஜய்சிங் வசம் உள்ளது. இவரிடம் இருந்துதான் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Delhi Court has summoned to Sun TV Group Chairman Kalanidhi Maran on IT Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X