ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு.. பெற்ற மகளே தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கொடூரம்
ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸியாபாத்: ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, கம்பியால் அடித்துக் கொன்ற மகளையும், அவரது கூட்டாளியான ஆசிரியையும் காஸியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பெயர் புஷ்பா தேவி. இவர்களுக்கு ராஷ்மி ராணா என்ற 21 வயது கல்லூரி செல்லும் மகள் உள்ளார்.

ராஷ்மிக்கு நிஷா என்ற ஆசிரியையுடன் ஓரினச் சேர்க்கை உறவு இருந்துள்ளது. இது தொடர்பாக தெரிய வந்ததும் புஷ்பா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் புஷ்பாவை இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொலை செய்த ராஷ்மி, நிஷாவுடன் தலைமறைவானார்.
இந்தக் கொலை தொடர்பாக சதீஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, காஸியாபாத் ரயில் நிலையத்தில் ராஷ்மியையும், நிஷாவையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இருவரும், புஷ்பாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் ராஷ்மி அளித்த வாக்குமூலத்தில், 'தான் சமீபகாலமாக நிஷாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அதற்கு புஷ்பா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அதனால் தங்களது உறவுக்கு தடையாக இருந்த தாயை அடித்துக் கொலை செய்ததாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது, சதீஷ்குமார் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஷ்மியும், நிஷாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஓரினச்சேர்க்கை உறவுக்காக பெற்ற மகளே தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications