"முதல்வரை வேலைக்காரர் போல ஆளுநர் நடத்துறாருங்க..." எம்.பிக்கள் குமுறல்.. இது டெல்லியில்!
டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவாலை வேலைக்காரன் போல நடத்துவதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லி: நாடாளுமன்ற விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி எம்.பிக்கள், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் - முதல்வர் கெஜ்ரிவால் இடையேயான மோதல் முற்றி வருவதாக தெரிவித்தனர்.
டெல்லியின் முதல்வராக கெஜ்ரிவால் இருந்தாலும், ஆட்சியில் அடிக்கடி ஆளுநர்கள் தலையிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங்கை தொடர்ந்து தற்போதைய ஆளுநர் அனில் பைஜாலும் கெஜ்ரிவாலுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதாக நாடாளுமன்ற எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மட்டுமில்லாமல், டெல்லி முதல்வரை வேலைக்காரன் போல ஆளுநர் அனில் நடத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து பேசிய விவாதத்தின் போது பேசிய டி.ராஜா, மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், பிரதிநிதியையும் இவ்வாறு நடத்துவது சரியில்லை என்றும், புதுச்சேரியில் கூட இதே நிலை தொடர்வதாக தெரிவித்தார்.
பின்னர் சபாநாயகர் சீட்டில் அமர்ந்திருந்த குரியன், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை தலைவர் ஹர்திப் சிங் பூரியை இந்த விவகாரத்தில் தலையிடும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த பூரி, நான் நாற்பது ஆண்டுகாலமாக பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். ஆனால் இந்த பேச்சுவார்த்தை அதைவிட கடினமானதாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications