தேர்தல் வாக்குறுதிப்படி டெல்லியில் 50% மின் கட்டணம் குறைப்பு: கேஜ்ரிவால் அரசு அதிரடி! !
டெல்லி: டெல்லியில் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50% குறைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் 400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கான கட்டணத்தில் 50% குறைக்கப்படும் என்றும் இது மார்ச் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் மின்சார கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90% டெல்லிவாசிகள் பயன்பெறுவர்.
அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. முந்தைய ஆம் ஆத்மி அரசு இலவச தண்ணீர் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால் ஆட்சி முடிந்தவுடன் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications