டெல்லி வீட்டுக்கு வாடகை ரூ.85000… முடியாட்டி காலி செய்யுங்கள்… கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்!
டெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வசிக்கும் காலத்துக்கு மாத வாடகையாக ரூ.85,000 செலுத்த வேண்டும் என்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வராக பதவி ஏற்றதும் மத்திய டெல்லி திலக்லேனில் உள்ள அரசு வீட்டில் குடியேறினார்.

அவர் பதவி விலகியதும் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு 15 நாள் கால அவகாசம் அளிக்கப்படும். இதனால் மார்ச் 1-ந் தேதி அவரை வீட்டை காலி செய்யுமாறு டெல்லி பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் மகளின் பள்ளித் தேர்வை காரணம் காட்டி மேலும் 15 நாள் நீட்டிப்பு கேட்டு இருந்தார். அது முடிவடைந்த பின்னரும் கெஜ்ரிவால் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு கவர்னர் ஒப்புதலுடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வசிக்கும் காலத்துக்கு மாத வாடகையாக ரூ.85,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் கூறும்போது, கெஜ்ரிவால் தங்கி இருக்கும் காலத்துக்கு அதற்கு உண்டான வாடகையை செலுத்தி விடுவார் என்று கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications